பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பாஜக ஆலோசனை

81பார்த்தது
பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பாஜக ஆலோசனை
அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் வரும் 30ம் தேதி மாலை பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மத்திய பட்ஜெட்டை வரவேற்றும், மாநில செயற்குழு கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றியதை வரவேற்றும் முப்பெரும் விழா‌ பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய, அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி