விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் நேற்று (டிச. 09) பிராந்தி பாட்டில் வாங்கினார். அதை தனது தந்தையிடம் கொடுத்தார். இரவில் பாட்டிலை திறக்க முயன்ற போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் பாட்டில் உள்ளே ஸ்டிக்கர் மிதந்தபடி இருந்தது. இதையடுத்து மது பாட்டிலை குறித்த கடைக்கு எடுத்து சென்று காட்டிய போது அதிகாரிகளுக்கு அனுப்புவதாக ஊழியர்கள் கூறினர்.