"புஷ்பா 2" திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் 5 நாள் அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி 5 நாட்களில் 922 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நாளை இத்திரைப்படத்தின் வசூல் 1000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியன் சினிமாவில் 900 கோடி ரூபாயை வேகமாக வசூலித்த திரைப்படம் இதுதான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.