தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது என சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான தமிழ்நாடு மாநிலத்தின் சிஏஜி அறிக்கை குறித்து முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், "2021- 2022ல் வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடியாக இருந்தது. 2022-2023ல் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.36,215 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 2022-23ல் வருவாய் வரவுகள் அதிகரிப்பதே பற்றாக்குறை குறைவிற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.