ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாணின் செல்போனில் பேசிய மர்ம நபர் அவரை கொலை செய்யப்போவதாக நேற்று (டிச. 09) மிரட்டல் விடுத்தார். மேலும் மிரட்டல் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலை மிரட்டல் விடுத்த மல்லிகார்ஜுனா ராவ் என்பவரை கைது செய்துள்ளனர். மது போதையில் அவ்வாறு பேசியதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.