நோய்களைப் போக்கும் கீரை வகைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கீரை 'துத்தி'. இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவ தன்மை கொண்டது. மூலநோய்க்கு ஆகச்சிறந்த நிவாரணியாக இருக்கும் துத்திக்கீரை மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் போன்றவற்றை நீக்கும். இது ஆண்மையைப் பெருக்கும் தன்மை கொண்டது. துத்தி இலையை நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை நீங்கும்.