இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக டிச. 19-ல் விளக்கமளிக்க அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரட்டை இலையை முடக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கையடுத்து சின்னத்தை வழக்கு முடியும் வரை யாருக்கும் தரக்கூடாது என உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.