ஆந்திரா: அனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் "புஷ்பா-2" படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேலஸ் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த மத்யனப்பா (40) உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்தும் படத்தை நிறுத்தாத திரையரங்கு ஊழியர்களிடம் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், திரையிடலை நிறுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.