தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், தூத்துக்குடியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, வின்பாஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் அமைய உள்ள மின்சார வாகன தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய வின்பாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.