தவெக-வில் 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

60பார்த்தது
தவெக-வில் 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில், “புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். தவெக-வின் 2ஆம் கட்ட மாவட்ட செயலாளர்களுடனான நேர்காணல் இன்று விஜய் முன்னிலையில் நடந்தது.

தொடர்புடைய செய்தி