அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் FIR கசிந்தது தொடர்பாக பல பத்திரிகையாளர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர், இது தொடர்பாக அவர்களின் செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.