மற்ற ரக அவரையை காட்டிலும் சேலம் நீல குட்டை ரக அவரைக்காய் கொத்து கொத்தாக காய்க்கும். களிமண் நிலத்தில் இந்த வகை நன்றாக வளர்கிறது. பிற அவரைக் காய்களை காட்டிலும் அதிக சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்தது. இதன் காம்பு முழுவதும் நீல நிறத்திலும், காய் குட்டையாகவும் இருக்கும். இது சற்று வித்தியாசமாக இருப்பதால் சந்தையில் மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க தயங்குவதில்லை. அதிக மகசூல் கிடைப்பதால் கூடுதல் வருவாயும் ஈட்ட முடிகிறது.