நாம் நீண்ட காலமாக பயன்படுத்தும் வாளியில் உப்புக் கறை அதிகமாக இருக்கும். இதை தேய்த்து கழுவினாலும் போகாது. அதற்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. ஒரு கிண்ணத்தில் கல் உப்பை எடுத்து அதில் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை பக்கெட் மீது ஊற்றி ஊற வைத்து, ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு நன்றாக கழுவினால் புதிய பக்கெட் போல மாறும். இறுதியாக பக்கெட் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். இது மேலும் உப்பு படிவதை தடுக்கும்.