நிவாரண உதவி வழங்கல்

65பார்த்தது
நிவாரண உதவி வழங்கல்
விக்கிரவாண்டி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் கடந்த 13ம் தேதி நடந்த திடீர் தீ விபத்தில் மணி, பழனிவேல் ஆகியோரது வீடுகள் எரிந்து சேதமானது.

விக்கிரவாண்டி கிளை, தியாகி விஸ்வநாததாஸ் அனைத்து அமைப்பு தொழிற் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் நாகரத்தினம் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண உதவி, அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவியை வழங்கினர்.

சங்கத் தலைவர் மணிகண்டன், செயலாளர் லயமணி, துணைச் செயலாளர் பிரதாப் , கிளைச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி