விழுப்புரம் கண்டச்சிபுரத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டெல்லியில் நிதி ஆயோக்' கூட்டம் நடைபெற்றது அதில் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரே கலந்து கொள்ளவில்லை. தமிழக முதல்வரின் பின் தொடர்ந்து 9 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை, 2026 தேர்தலுக்கு இப்போது இருந்தே பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பொன்முடி பேசினார்