புரோ கபடி: தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்

56பார்த்தது
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்
புரோ கபடி லீக் போட்டியின் 11ஆவது சீசன் ஹைதராபாத்தில் நேற்று (அக்.18) தொடங்கியது. அதன் முதலாவது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்சை அணிகள் மோதின. இதில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இன்று (அக்.19) நடைபெறும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகளுக்கான போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அதேபோல், புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கான போட்டி இரவு 9 மணிக்கும் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி