கோ. நம்மாழ்வாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு

83பார்த்தது
கோ. நம்மாழ்வாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு
விழுப்புரம் மாவட்ட பசுமை இயற்கை விவசாய இயக்கம் சாா்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாா் 10-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு பசுமை இயற்கை விவசாய இயக்கத்தினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறி விதைப் பைகள், கன்றுகளை வழங்கினா்.

பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுவை ஒருங்கிணைப்பாளா் ரமணகுரு, விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஏழுமலை, நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், செந்தில் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி