அயலகத் தமிழர்கள் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “உலக அளவில் தமிழர்களின் உழைப்பும், ஆற்றலும் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் என உலகின் அனைத்து தலைசிறந்த நிறுவனங்களிலும், தமிழர்களின் திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது. அங்கெல்லாம் முக்கியப் பொறுப்புகளில் தமிழ் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்' என பெருமிதம் தெரிவித்தார்.