கொளத்தூரில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், கலைஞர் தலைமையில் 5 முறை ஆட்சியில் இருந்தாயிற்று, எனது தலைமையில் ஒரு முறை என 6 முறை ஆட்சி செய்து வருகிறோம். 7வது முறையாகவும் ஆட்சியில் அமர்வோம் என கூறியுள்ளார். இவை அனைத்தும் பதவி சுகத்திற்காக அல்ல, மக்களுக்காக என கூறிய அவர், இந்த முத்துவேன் கருணாநிதி ஸ்டாலின் உடலில் உயிர் உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன் என கூறினார்.