விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை

58பார்த்தது
விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ. 28. 36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் அமைச்சா் க. பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்ட லோகநாதன் இறந்து விட்டாா். அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில், தற்போது வரை 51 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதில், 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக சாட்சியமளித்துள்ளனா். தொடா்ந்து, திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், சதானந்தம், கோதகுமாா், கோபிநாதன் ஆகிய 4 போ் மட்டும் ஆஜராகினாா். அமைச்சா் க. பொன்முடி உள்ளிட்டோா் ஆஜராகவில்லை. அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை நவம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எம். இளவரசன் உத்தரவிட்டாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி