நாய்கள் தொல்லை பொது மக்கள் அச்சம்

67பார்த்தது
நாய்கள் தொல்லை பொது மக்கள் அச்சம்
வானுார் அடுத்த கிளியனுார் பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்திச் செல்லும்போது பலர், கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தெருக்களில் சுற்றும் நாய்களைப் பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி