குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் அவதி

78பார்த்தது
குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் அவதி
வானுார் அடுத்த எறையூர், நெமிலி, திருவக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள், கிரஷர் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், சிதம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான டிப்பர் லாரிகளில், கிரஷர் பவுடர்கள், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகள், பெரும்பாக்கம் - திருவக்கரை சாலையில் சென்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், லாரிகள் அதிகளவில் சென்று வருவதால், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளது. பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் சாலை பழுதடைந்த உடன், ஊராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் சாலையை புதுப்பிக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும் கல்குவாரிக்கு செல்லும் வாகனங்கள் சாலையை வீணடித்து வருகிறது. எனவே கிரஷர் மற்றும் கல் குவாரிகள் நடத்தும் உரிமையாளர்கள் செலவில், அந்த சாலையை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி