விக்கிரவாண்டி ஒன்றிய, நகர தி. மு. க. , செயல்வீரர்கள் கூட்டம் பனையபுரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், அன்னியூர் சிவா எம். எல். ஏ. , மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது ஆகியோர் வரவேற்றனர். அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், கருணாநிதி நுாற்றாண்டு விழா கொண்டாடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் எம். எல். ஏ. , புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், இளந்திரையன், கற்பகம் மாநில மகளிர் அணி தேன்மொழி ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.