சிறுமி பாலியல் வழக்கு கைதி சிறையில் தற்கொலை

69பார்த்தது
சிறுமி பாலியல் வழக்கு கைதி சிறையில் தற்கொலை
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், விவேகானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்த விவேகானந்தன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறைத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி