மதுரை கத்தப்பட்டி பகுதியில் கடன் வாங்கி பேக்கரி நடத்தி வந்த ராஜா - மலைச்செல்வி தம்பதி, போதிய வருமானம் கிடைக்காததால் கடையை மூடியுள்ளனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி வினோத் என்பவர் தான் கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டு தனது நண்பருடன் சென்று, தம்பதியைத் திட்டியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த தம்பதி தற்கொலைக்கு முயன்றனர். இதில், கணவர் உயிரிழந்த நிலையில், மலைச்செல்வி உயிர்பிழைத்தார். அவர் கொடுத்த புகாரில் போலீசார் இருவரை கைது செய்தனர்.