கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலியில் 3 ஆண்டுகளாக வேலை தேடி வந்துள்ளார். ஆனால் எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கவில்லை. இதனால் அதே செயலியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டரை பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். வேலை கிடக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.