தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி பற்றி தவறான தகவல்களை பரப்பியதால் விற்பனை குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில விஷமிகள் தர்பூசணியில் செயற்கை ரசாயனம் கலக்கின்றனர் என்ற புகாரில், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் அதிகாரிகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.