1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைக்கப்படவுள்ளன. 40 விழுக்காடு அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களைக் கொண்ட தமிழ் பாட புத்தகம் வரவுள்ளது. மாணவர்கள் முழு பாடத் திட்டங்களையும் படிப்பதற்கு சிரமப்படுவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம் குறைக்கப்பட்ட புதிய தமிழ் பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.