நாட்டிலேயே பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம் என்று மத்திய அரசின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அதை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதத்துடன் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் இது கூறப்பட்டுள்ளது.