திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மணக்குப்பத்தில் திருவெண்ணெய்நல்லுார் மேற்கு, பேரூராட்சி மற்றும் திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றியம், நகரம் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, திருவெண்ணெய்நல்லுார் மேற்கு ஒன்றிய செயலாளர் விசுவநாதன், திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கம், தொழிலதிபர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரசாரகுழு தலைவர் தேன்மொழி, பேரூராட்சி செயலாளர் கணேசன், திருக்கோவிலுார் நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், எம். எல். ஏ. , க்கள் லட்சுமணன், சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், இளந்திரையன், கற்பகம், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், துணை சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.