ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் கோவி செழியன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உயர் கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்டியுள்ளோம். இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆளுநர் தனது நிலையைத் தொடர்ந்தால் தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கட்டத்தை அவர் எட்டாமல் இருப்பது அவர் பதவிக்கு அழகு” என்று பேட்டியளித்துள்ளார்.