திருக்கோவிலூரில் ஏரி மண் கடத்திய லாரி பறிமுதல்

50பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதிகளில் முறையாக அனுமதி பெறாமல் ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை மர்ம நபர்கள் லாரிகள் மூலம் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து இன்று (பிப் 5) விழுப்புரம் கனிமவளத்துறை உதவி இயக்குனர் பறக்கும் படையை சேர்ந்த முத்து என்பவர் திருக்கோவிலூர் நான்கு முனைச் சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் ஏரியிலிருந்து வண்டல் மண்ணை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் வாகனத்தை பிடித்து திருக்கோவிலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபனிடம் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் வண்டல் மண்ணுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
தொடர்ந்து இந்த பகுதியில் வண்டல் மண் கொள்ளை நடைபெற்று வருவதும் அதனை கண்டுகொள்ளாமல் காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் கனிமவள கொள்ளையர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளுக்கு காரணம் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி