திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

85பார்த்தது
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும், மதச்சார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வாழ்ந்து வருகின்றனர். வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பை சார்ந்த அமைப்பினர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிக்கிறது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்த, பொது அமைதி, மத நல்லிணகத்தை பேண அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி