கடந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சதுர அடியின் விலை ரூ.6,300 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.7,173 ஆக (16%) உயர்ந்துள்ளதும், டெல்லியில் ஒரு சதுர அடி ரூ.5,445 ஆக இருந்த நிலையில் ரூ.8,105 ஆக (49%) உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் வீடுகளின் தேவை அதிகரிப்பு காரணமாக வீடுகளின் விலை உயர்ந்துள்ளது.