தேர்தல் செலவிற்கு கொடுத்த கடனை திருப்பிக் கேட்டபோது ஆட்களை வைத்து மிரட்டுவதாக, தவெக நிர்வாகி மீது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக கோட்டக்குப்பம் நகரச் செயலாளராக இருப்பவர் முகமது கவுஸ். அவரது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது ரூ.60 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அதில் ரூ.46 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் ஆஷிக் அலி என்பவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.