2024ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்களால் தமிழ்நாட்டில் 77 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 8,512 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் இயற்கை பேரிடர் காரணமாக 2,936 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாநிலம் வாரியாக உயிரிழந்தோரின் பட்டியலையும் சேத விவரத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.