கர்நாடகா: பெங்களூரு ஆனேகல் பகுதியில் நடுரோட்டில் மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீகங்கா (29), மோகன் ராஜு (32) தம்பதிக்கு 6 வயது மகன் உள்ளார். இந்நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன் ராஜு, நடுரோட்டில் ஸ்ரீகங்காவை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.