அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நம் நாட்டவர்கள் கைகளில் விலங்கு கட்டி அவமானப்படுத்தி அனுப்பப்பட்டுள்ளனர். இது ஒரு இந்தியராக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கொந்தளித்துள்ளார். மேலும், “2013ஆம் ஆண்டு இந்திய தூதரக அதிகாரி தேவயாணி இதுபோல அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட போது, இந்திய வெளியுறவு செயலர் உடனடியாக கடும் கண்டனத்தை தெரிவித்தார். அமெரிக்கா செய்தது 'மோசமானது' என பிரதமர் மன்மோகன் கடுமையாக விமர்சித்தார்” என்றார்.