திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் கட்சியின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பாடியந்தல் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை தாங்கி, கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். கிளை செயலாளர் சங்கர்காந்த் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். அரசு நடுநிலைப் பள்ளிக்கு 'டிவி' வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜி, ஒன்றிய நிர்வாகிகள் விபூஷன், ஏழுமலை, ரவி, குப்பன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தேவிகா நன்றி கூறினார்.