திண்டிவனம் அருகே இடி மின்னலுடன் கூடிய மழையால் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆவணிப் பூர் பகுதியில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ், உஷா தம்பதிகளுக்கு சொந்தமான பசு மாடு மீது இடி மின்னல் தாக்கியதில் பசு மாடு இறந்தது.
மின்னல் தாக்கி பசு மாடு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.