கிளியனூர் அருகே மது பாட்டில் கடத்தியவர்கள் கைது

68பார்த்தது
கிளியனூர் அருகே மது பாட்டில் கடத்தியவர்கள் கைது
கிளியனுார் தலைமை காவலர் ஆறுமுகம், போலீஸ்காரர் மணிமாறன் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 3) கொஞ்சிமங்கலம் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ராயல் என்பீல்டு பைக்கில், பிரம்மதேசம் நோக்கி வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் பையில், 102 புதுச்சேரி மதுபாட்டில்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. 

விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் ரெட்டிகுப்பம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மேகநாதன், 29; சண்முகம் மகன் ஆகாஷ், 21, சொந்த ஊரில் விற்பனை செய்ய புதுச்சேரியில் மதுபாட்டில்கள் வாங்கி கடத்திச் செல்வது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 95 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி