விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கும்பாபி ேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, மலைக்கோவில் வளாகம் முழுதும் திருப்பணிகள் மேற்கொள் ளப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் இன்று 21ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
அதனையொட்டி, கடந்த 15ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 18ம் தேதி காப்பு கட்டப்பட்டது. மாலை முதல்கால யாகசாலை பூஜையும், 19ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று 20ம் தேதி காலை வீர சைவ அடியார்கள் சார்பில் இருபதாம் பட்ட சுவாமிகளுக்கு குரு திருவடி வழிபாட்டை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் யாகசாலையில் வழிபாடு நடந்தது.
கும்பாபிேஷக தினமான இன்று 21ம் தேதி காலை 9: 00 மணிக்கு தீபாராதனை வழிபாடும், தொடர்ந்து 9: 15 மணி முதல் 10: 45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.