விழுப்புரம் ராஜிவ் காந்தி நகர், மருதுார் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் குகன், 23; சென்னை மீனம்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் (அக்.,11) இரவு பணியை முடித்து பைக்கில் வீட்டிற்கு வந்தார். கேணிப்பட்டு அருகே இரவு 10: 00 மணிக்கு வந்தபோது, பின்னால் வந்த இன்னோவா கார் மோதி படுகாயம் அடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.