ரெட்டணை முருகர் கோவிலில் 108 பால் குடம் ஊர்வலம்

50பார்த்தது
திண்டிவனம் அடுத்த ரெட்டணை வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் உள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் பால்குடங்களை வெண்ணியம்மன் கோவிலில் இருந்து தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பாலமுருகன் கோவிலை அடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் வள்ளி தேவசேனா சமேத பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி