பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில், நேற்று 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.