செஞ்சி காந்தி பஜாரில் ராஜேஷ் என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அங்கு, சென்ற நபர் ஒருவர் தன்னிடம் இருந்த நகையை அடகு வைக்க கொடுத்துள்ளார். அதனை பரிசோதித்த கடை உரிமையாளர் அது போலி என்பதை கண்டறிந்தார். உடனடியாக அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 10 போலி மோதிரங்கள் இருந்தை கண்டறிந்தார். இதற்கிடையே செல்போனில் யாரிடமோ பேசிய அவர், “என்னை மடக்கி உட்கார வச்சுட்டாங்க, இன்னும் அடிக்கல, சீக்கிரம் வாப்பா” என பேசியுள்ளார்.