அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேர்தல் விதிகளை மீறியதாக ராஜகண்ணப்பன் மீது இரு வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.