உத்தர பிரதேசம்: மகோரா நகர் காவல் நிலையில் காவலராக பணியாற்றும் மோஹித் ராணா என்பவர் தன்னை பலாத்காரம் செய்த முயன்றதாக அங்கு பணியாற்றும் பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அதில் ஆபாச வீடியோக்களை காட்டி தன்னிடம் அத்துமீறியதாக தெரிவித்தார். இது குறித்த விசாரணைக்கு ராணா அழைக்கப்பட்ட போது ஆபாச வீடியோக்களை அழிக்க முயன்றது தெரிந்தது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.