விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் மற்றும் மனம்பூண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 700க்கும் மேற்பட்டவர்களை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி, சமுதாய கூடம், தனியார் திருமண மண்டபம் ஆகியவற்றில் முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ள நிலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கு வெள்ளநீரில் மூழ்கிய கூட்டுறவு கடன் சங்கத்தை பார்வையிட வந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட ஆய்வு செய்தார். அதன் பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட இருந்த உணவினை சப்பிட்டு பார்த்தார். மேலும் அவர்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் பாட்டில்களில் காலாவதி தேதி உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் அந்த உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க கூறினார். இந்த ஆய்வின்போது அவருடன் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.