தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (மார்ச். 18) மாலை டெல்லிக்கு சென்ற அவர் இன்று (மார்ச். 19) காலை தமிழகத்திற்கு திரும்பினார். டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் டெல்லிக்கு அவர் பயணித்துள்ளார்.